பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி இரண்டு நாள் பணமாக இன்று ரேபரேலிக்கு இன்று காலை சென்றுள்ளார்.
அவர் ஹர்சந்த்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அமைச்சர் தினேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதரவளார்களும் வழிமறித்து கத்வாராவில் உள்ள நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தொண்டர்கள், ராகுல் திரும்பிச் செல்லுங்கள், நாட்டில் உள்ள அனைத்து தாய்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்ற பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.
பாஜக ஆதரவாளர்களின் போராட்டத்துக்குப் பயந்து ராகுல் வேறு வழியில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிங்,
ராகுல் காந்திக்கும் ஒரு தாய் இருக்கிறார். வேறொருவரின் தாயைத் திட்டும் உரிமையை அவர் யாருக்கும் வழங்கக்கூடாது. ஒரு தாயைப் பற்றி இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களை அவர் கண்டித்திருக்க வேண்டும்.
அவதூறு பேசியவர்களை ஆதரிக்கவில்லை என்றும், அவர்களைத் தண்டிக்கப்படுவார்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் அவர்களின் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பேன் என்றும் கூறியிருக்க வேண்டும்.
பிகாரில் தர்பங்காவின் புறநகரில் நடைபெற்ற விழாவில் நபர் ஒருவர் மோடியின் தாயைக் குறித்து அவதூறாகப் பேசியது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.