சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அடைவதற்கான பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தாமதமாகின.
சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து ஆற்றை கடக்க தற்காலிக மரப் பாலத்தை அமைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பெண்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியான நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
மேலும், நிலச்சரிவு சம்பவத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெய்சிங் ஷெரிங் ஷெர்பா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.