இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவற்றையெல்லாம் ரஷியா கண்டுகொள்வதேயில்லை.
இதனைத் தொடர்ந்து, ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. ரஷியாவின் பொருளாதாரத்தில் எண்ணெய் வர்த்தகம் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார்.
இருப்பினும், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்குமாறு ஜி7 அமைப்பான கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, சீனா மீது 50 முதல் 100 சதவிகிதம் வரையில் வரி விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து ஜி7 அமைப்பு விவாதிக்கவுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க அவுட்சோர்சிங் வரன்முறை மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.