பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!
இந்தியா - நேபாள பிரதமர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியுடன், நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
நேபாளத்தில், சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
நேபாள இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, கடந்த செப்.12 ஆம் தேதி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், நேபாளத்தின் முதல் பெண் பிரதமரான சுசீலா கார்கி, இன்று (செப்.18) பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் வரலாறு காணாத புரட்சியின் மூலம் பிரதமரான சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும், நேபாள அரசின் முன்னுரிமைகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின்போது, நேபாளத்தில் புதியதாக பொது தேர்தல் நடத்துவதே இடைக்கால அரசின் முதல் நோக்கம் என பிரதமர் சுசீலா கார்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?
Sushila Karki, who has been sworn in as the interim Prime Minister of Nepal, spoke to Prime Minister Narendra Modi over the phone.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.