முகப்பு
இந்தியா

ஈரான் போர்: நாடு திரும்பிய 6 லட்சம் இந்தியர்கள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக, 6 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்.

Updated On : 2 ஏப்ரல் 2026, 6:12 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக, சுமார் 6 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருவதால், மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், போர்ப் பதற்றம் காரணமாக இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

மத்திய கிழக்கில் நிலவி பதற்றத்துக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 6,24,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வளைகுடா நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஸீம் ஆர் மகாஜன் கூறியுள்ளார்.

மேலும், போரின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தூதரகங்களும் அலுவலகங்களும் 24 மணிநேரமும் இயங்கி, மாணவர்கள், குடிமக்கள், மாலுமிகள், வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு வழக்கமான தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இந்திய நண்பர்கள் மிகவும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும் ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Over 6 lakh passengers return to India amid West Asia conflict, says Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.