முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சரும் ஆளுநரும் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்தி வருவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

Updated On : 2 ஏப்ரல் 2026, 5:03 pm IST
மமதா பானர்ஜி - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சரும் ஆளுநரும் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்தி வருவதாக மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் சகர்திகியில் மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், "இந்தப் போரை எதிர்த்து நாம் அமைதியாக போராட வேண்டும். ஹைதராபாதிலிருந்து யாரோ ஒருவர் உங்களைத் தூண்டிவிட வந்தார். அவருக்கு பாஜக பணம் கொடுத்துள்ளது.

அவர்கள் உங்களை ஆயுதமாக்கி, சாலைகளைத் தடுத்தனர்; நீதிபதிகளைச் சுற்றி வளைத்தனர்.

Advertisement

Advertisement

இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது திரிணமூல் அரசை நீங்கள் விரும்பினால், அதற்கேற்றவாறு பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்

இப்போது, நிர்வாகமும் சட்டம் - ஒழுங்கும் என் கைகளில் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அவற்றைத் தேர்தல் ஆணையம் அதன் கைகளில் எடுத்துக் கொண்டது. இருப்பினும், அவை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின்கீழே செயல்படுகின்றன.

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தலைமை இயக்குநர், காவல் ஆணையர், மாவட்ட நீதிபதிகள், காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். எனது கைகளிலிருந்த அதிகாரகங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றி, ஒருபுறம் உள்துறை அமைச்சரும் மறுபுறம் ஆளுநரும் வரவழைக்கப்பட்டு, இங்கு சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

summary

The Election Commission has taken all power from my hands and is running a super President's rule here, with the Home Minister on one side and the Governor summoned on the other, says West Bengal Chief Minister Mamata Banerjee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.