முகப்பு
இந்தியா

டிரம்ப் - பிரதமர் மோடி பேச்சு!

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வழியாகப் பேசியது பற்றி...

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 5:05 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகி வருகிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசியதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இருவரிடையேயான உரையாடல் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லையெனினும், காத்திருங்கள் என்று மட்டும் செர்ஜியோ கூறியுள்ளார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மீட்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான், பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசியுள்ளார்.

summary

Stay Tuned: US Ambassador Says Trump Spoke To PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.