உச்ச நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வாதம் 
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வாதிடவுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு விசாரணையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நாளை வாதிடவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிரான நாளைய (பிப். 4) வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் மமதா பானர்ஜியே வழக்குரைஞராக ஆஜராகவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி இருப்பதாகவும் மத்திய பாஜக அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இதனிடையே, எஸ்ஐஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜன. 28 ஆம் தேதியில் மனுத் தாக்கலும் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ள நிலையில், வழக்கில் மமதா பானர்ஜியே வழக்குரைஞராக ஆஜராகவுள்ளார். முதல்வரே வழக்கு விசாரணையில் வழக்குரைஞராக ஆஜராவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

மாநிலத்தில் எஸ்ஐஆர் தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து மமதா பானர்ஜியின் மனுவும் விசாரிக்கப்படலாம்.

Mamata Banerjee will argue in the Supreme Court tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது

பிப்.10-இல் பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம்

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டம்: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

SCROLL FOR NEXT