முகப்பு
இந்தியா

பிப்.7-ல் மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்குச் செல்வது குறித்து...

Updated On : 4 பிப்ரவரி 2026, 5:39 pm IST
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக மலேசியாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்.7 அன்று அரசு முறைப் பயணமாக மலேசியாவுக்குச் செல்வதாகவும், பிப்.8 வரையிலான இந்தப் பயணமானது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படுவதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 3 ஆவது முறையாக மலேசியாவுக்கு பிரதமர் மோடி செல்வதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்தப் பயணத்தில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இத்துடன், பிரதமர் மோடியின் வருகையின் சமயத்தில் 10 ஆவது இந்தியா - மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகளின் மன்றம் (ஃபோரம்) நடைபெறவுள்ளது.

முன்னதாக, மலேசியாவில் 2025 அக்டோபரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமது ஹாஜி ஹசனுடன் இருநாடுகளின் ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that Prime Minister Narendra Modi will be visiting Malaysia on an official trip.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.