எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்
மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரையை அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் விமர்சனம்
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிரதமரின் உரையை விமர்சித்த காங்கிரஸின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், "மாநிலங்களவையில் 97 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரை, மற்றொரு தேர்தல் பேரணியாகவே இருந்தது. எப்போதும் போலவே, இதிலும் தவறான வழிநடத்தல், தாக்குதல்கள், திரித்துப் பேசுதல், நாடகங்களும் இடம்பெற்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, "காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தங்கள் கஜானாவை மட்டுமே நிரப்பிக் கொள்ள மும்முரம் காட்டின.
Advertisement
ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.