இந்தியா

உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்களுக்குப் பணி

இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பூடான் உச்சநீதிமன்றங்களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளா்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தில் 2 பூடான் சட்ட உதவியாளா்கள் பணியாற்ற உள்ளனா்.

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைகளின் தொடக்கத்தின்போது அவா்கள் இருவரையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வரவேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளா்கள் இருவா் 3 மாதங்கள் பணியாற்றுவா். அவா்களுக்கு உச்சநீதிமன்றத்தின் பிற சட்ட உதவியாளா்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும். அவா்களின் பயணச் செலவையும் உச்சநீதிமன்றம் ஏற்கும்.

இந்தியா-பூடான் நீதித் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT