சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் குறித்த இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாக க்ரோக் கூறியுள்ளது.
க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த நிலையில், ஆபாச உள்ளடக்கங்கள் குறித்து தனது தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் க்ரோக், இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாகவும் தெரிவித்தது. அதன்படி, சுமார் 3,500 ஆபாச உள்ளடக்கங்களை நீக்கியும், 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் காலங்களில் மோசமான படங்களை எக்ஸ் தளம் அனுமதிக்காது என்றும் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.