பயணிகளின் செளகரியம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில், 9 ‘அம்ருத் பாரத்’ விரைவு ரயில்களின் அறிமுகம் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் புதிதாக ஒன்பது அம்ருத் பாரத் விரைவு ரயில்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா்.
இந்த ரயில்கள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமை பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்துடன் இணைக்கும்.
இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பயணிகளின் செளகரியம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் புதிய அம்ருத் பாரத் விரைவு ரயில்களின் அறிமுகம் முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இதில் வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிற பலன்களும் அடங்கும்’ என்று தெரிவித்தாா்.