ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் தலைநகரமான ஸ்ரீநகரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டுள்ள ஸ்ரீநகரில் பெரும்பாலான போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்படைந்துள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன. 27) 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோசமான வானிலையின் காரணமாக அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் 25 விமானங்களின் வருகையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், குடியரசு நாள் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஜம்மு - காஷ்மீர் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.