பிரதமர் மோடி. கோப்புப்படம்.
இந்தியா

பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தரில் பாதுகாப்பு தீவிரம்!

பஞ்சாபில் தீவிர பாதுகாப்பு தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பஞ்சாப், ஜலந்தரில் போலீஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப். 1ல் பிரதமர் மோடி தேரா சச்கந்த் பல்லனுக்கு வருகை தர உள்ள நிலையில் நேரடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.

சம்பவ இடங்களுக்கு வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகள் இணைந்து பள்ளி வளாகங்கள் முழுவதுமாக சோதனை மேற்கொண்டனர். விடுமுறை நாள் என்பதால் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பதற்றம் தவிர்க்கப்பட்டது.

அதேபோன்று, தேரா சச்கந்த் பல்லன் வளாகம் முழுவதும் போலீஸார் சோதனையிட்டனர். மிரட்டல் மின்னஞ்சல்களைச் சரிபார்த்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதன்கிழமை சண்டீகரில் உள்ள பல பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்த வாரத் தொடக்கத்தில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் பாட்டியாலா மற்றும் ஹரியாணாவில் உள்ள அம்பாலா ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு சில பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Bomb threats for the Dera Sachkhand Ballan and two schools in Jalandhar were received on Saturday, a day ahead of Prime Minister Narendra Modi's visit to the headquarters of the sect.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிசுவின் மூளையில் குறைபாடு! 31 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!

உயர்ந்த வேகத்தில் குறையும் வெள்ளி... ஒரே நாளில் ரூ. 85,000 சரிவு!

பிரதமர் மோடி செல்லவிருக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT