முகப்பு
இந்தியா

7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?

7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் என்று வரும் குறுந்தகவல் பற்றி..

கோப்புப்படம் - DIN
பகிர்:

நாடு முழுவதும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியம் என்பது, அனைவருக்கும் வழங்கப்பட்டுவந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு மானியம் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுவரை வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான குறுந்தகவல்கள் வரலாம். விலை உயர்வு, முன்பதிவு தொடர்பானவையாக இதுவரை இருந்திருக்கலாம்.

ஆனால், தற்போது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவருகிறது. அதற்கு பதிலளிக்காவிட்டால் 7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.