முகப்பு
தற்போதைய செய்திகள்

தேவகோட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சி.கே.மங்களம் அருகே இருப்பது  ஓரிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி மகன் ஆரோக்கிய இளங்கோ(42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் தோல்பைகள் தயாரிக்கு நிறுவனம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரைக்குடி

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சி.கே.மங்களம் அருகே இருப்பது  ஓரிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி மகன் ஆரோக்கிய இளங்கோ(42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் தோல்பைகள் தயாரிக்கு நிறுவனம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரைக்குடி வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் அங்கும் அதே தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகல் நேரமாகியும் அவர் அரையிலிருந்து வெளிவராமல் இருந்ததால் விடுதியில் பணிபுரியும் பையன் அந்த அறையில் சென்று பார்த்தபோது சேலையில் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்னர். போலீசார் வந்து தூக்கிட்டவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இறந்த இளங்கோவிற்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →