இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்புடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகமும் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பும் சென்னையில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் சி.ஐ.ஐ. தலைமை செயல் அதிகாரி ஆனந்த்சுறானா மற்றும் வேந்தர் க.ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதன்படி, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., மற்றும் பட்டயச் சான்றிதழ் படிப்புகளில் மின்னணு மூலம் அறிதல் (இ-லேர்னிங்) , மின்னணு மூலம் பதிவாக்குதல் (இ-பப்ளினிங்) போன்ற துறைகள் தொடங்கப்படும். இதற்கான பாடத்திட்டத்தை தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப சி.ஐ.ஐ. கூட்டமைப்பு வழி வகுத்துத் தரும். மேலும் இந்தத் துறையில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.அப்போது பேசிய, அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் மேலாளர் திர்டிப் ராய் சவுத்திரி, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும், பயிற்சி மேற்கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அடோப் சிஸ்டம் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, சென்னை சி.ஐ.ஐ. தலைவர் எஸ்.ஸ்ரீதரன், காட்கிராப் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரி ஏ.இளங்கோவன், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், பேராசிரியர் சேஷாத்திரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.