கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடி எரிப்பு: 12 பாஜகவினர் கைது
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறப்பைக் கண்டித்து திண்டாமை ஒழிப்பு முன்னணி, இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதற்கு பதிலாக நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது இரு கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளையும் அக்கட்சியினர் எரித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய சமரசப் பேச்சைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த 12 பேரை பெரியக்கடை போலீஸார் கைது செய்தனர். பாஜகவினர் 12 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவராதபடி வழக்குப்பதிவு செய்த பெரியக்கடை போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.