முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து மக்கள் விழித்தெழ வேண்டும்: ப.சிதம்பரம்

​நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:44 AM
பகிர்:


நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்டப்பேரவை அதிகாரத்தை நாடாளுமன்றம் கையில் எடுத்துள்ளது. 

காஷ்மீரைப் போல மற்ற மாநிலங்களும் பிரிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்த சிதம்பரம், நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும் என்றார். 

மேலும், நரேந்திர மோடி அரசு தொடர்ந்தால் நாடு சிதறுண்டு போகும் என்று சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →