முகப்பு
தற்போதைய செய்திகள்

கூத்தாநல்லூர்: த.மு.மு.கட்சி வெள்ளி விழாவில் ஆயிரம் மரக்கன்றுகள் நட தீர்மானம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கூத்தாநல்லூர் த.மு.மு.கட்சி நிர்வாகிகள் குழுக் கூட்டம்
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகரத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனையொட்டி முன்னேற்பாட்டுக்கான நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில், நகர த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், நகர அமைப்புக் குழு தலைவர் ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார்.

அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹ்மத்துல்லாஹ் பேசியது, தமுமுக வின் 25 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். விழா நினைவையொட்டி கொடிக்கம்பம் அமைக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கரோனா எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்க வேண்டும். மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் உணவுகள் வழங்குவது.

மூத்த நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் கரோனாவில் முழு மூச்சாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் கெளரவப்படுத்த வேண்டும்.

நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். அதேப் போல், விதைப் பந்துகளை தூவ வேண்டும் என்றார். கூட்டத்தில், நிர்வாகிகள் நைனாஸ் அஹம்மது, ஜெகபர் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →