முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரம்

ஸ்ரீநகர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரின் புறநகரான நர்பால் சோதனைச் சாவடியில் காவல்துறை திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை காவல்துறையினர் நிறுத்த முயன்றனர், ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ஷாஜாத் சலாஹி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பயங்கரவாத நடவடிக்கையை கண்காணிக்கும் அடிப்படையில் தடுப்பு வைத்து சோதனை செய்து வந்தோம். இவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றபோது, அந்த கார் நிற்காமல் சென்றது.

இதைத்தொடர்ந்து, இப்பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →