முகப்பு
தற்போதைய செய்திகள்

அமமுகவுக்கு குக்கர், நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி: தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
தேர்தல் ஆணையம்
பகிர்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் குக்கர் சின்னமும், சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் நடந்த தேர்தலிலும் இந்தக் கட்சிகளுக்கும் இந்த சின்னங்களே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →