முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்ககிரி கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 

சங்ககிரி நகர்ப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை இரவு பல்வேறு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சங்ககிரி பழைய எடப்பாடி சாலையில் உள்ள புனித அந்தோனியர் ஆலயம்
பகிர்:

சங்ககிரி: சங்ககிரி நகர்ப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றது. 

சங்ககிரி நகர்பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம்,  சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு  கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சங்ககிரி சிஎஸ்ஐ  கிறிஸ்துவ ஆலயம்.

புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சங்ககிரி புனித அந்தோனியர் ஆலய வளாகத்தில் வியாழக்கிழமை  இரவு     அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்

புனித அந்தோனியர் ஆலயத்தின் பங்குத்தந்தை  சகாயராஜ் திருப்பளி ஆராதனைகளில் கலந்து கொண்டு பக்தர்களை ஆசீர்வதித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி  வியாழக்கிழமை இரவு  புனித அந்தோனியர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டோர்

அதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக்வெட்டியும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

முழு கட்டுரையைப் படிக்க →