நாகை: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கத்தால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்கவேண்டும், நுண்நிதி நிறுவனங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ளகடன்களை அரசே ஏற்று கடனை தள்ளுபடி செய்யவேண்டும், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும், 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கவேண்டும், வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்க நாகை ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவாராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, நாகை ஒன்றியச்செயலாளர் பி.டி.பகு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், ஒன்றியத் தலைவர் ஜி.முருகையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் வி.ராதா, மாவட்டத் துணைத்தலைவர் கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரப் பொறுப்பாளர் சு.மணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.