முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர்

தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:


தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள தனியார் குடோனில் காவலர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

அப்போது இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வில்பி, குயின்தாஸ், ஆரோக்கியம், சமந்தா அப்பு, அந்தோணி ரூபசிங்கே, விக்ரமசிங்கே, ரவிச்சந்திரன், ஆகியோர் என தெரிய வந்தது. 

அவர்கள் கடந்த  பிப்ரவரி 29- ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி க்கு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து அவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →