முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒருவர் பலி; மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜலால் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On : 18 ஜூன், 2020 at 8:53 AM
கோப்புப் படம்
பகிர்:


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜலால் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடலை மாநகராட்சி ஊழியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் தூத்துக்குடி மையவாடி கொண்டுவரப்பட்டு அங்கு குழி தோண்டப்பட்டு மாநகராட்சி சுகாதார நல அலுவலர் அருண்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடலை அடக்கம் செய்தனர்.

இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 -ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.