முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் பலி

சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

Updated On : 21 ஜூன், 2020 at 1:20 PM
பகிர்:

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் 4 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Advertisement

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.