petrol, diesel sale in chennai 
தற்போதைய செய்திகள்

16ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 16-ஆவது நாளாக திங்கட்கிழமையும் உயா்த்தப்பட்டது. 

DIN

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 16-ஆவது நாளாக திங்கட்கிழமையும் உயா்த்தப்பட்டது. 

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

அதனால், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 6-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயா்த்தி வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 16-ஆவது நாளாக திங்கட்கிழமையும் உயா்த்தப்பட்டது.

இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.29 பைசா அதிகரித்து 82.87 ரூபாய்க்கும் டீசல் 0.50 பைசா அதிகரித்து லிட்டருக்கு 76.30 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT