முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரான் துறைமுகத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: போர்க்கால மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ஈரான் துறைமுகத்தில் நான்கு நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:


ராமேசுவரம்: ஈரான் துறைமுகத்தில் நான்கு நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் இருந்து ஈரான் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி, நாகை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் குஜராத், கேரளா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் 764 தமிழக மீனவர்கள்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் முடக்கப்பட்டது. இதனால் மூன்று மாதங்களாக ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனார். 

இந்நிலையில் இந்திய கடற்படை கப்பல் கடந்த நான்கு நாள்களுக்கு முன் ஈரான் சென்றது. இதில் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை ஏற்ற முடியாத நிலையில் மற்ற 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தூத்துக்குடி அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஈரான் துறைமுகத்தில் விடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க இந்திய கப்பல் வரும் என்ற நம்பிக்கையுடன் நான்கு நாள்களாக தமிழக மீனவர்கள் துறைமுக வாயிலில் காத்து இருக்கின்றனர். இந்தியா அரசு தங்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →