ராகுல் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தம்
ராகுல் காந்தியின் டிராக்டர் பயணத்தை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதை அடுத்து 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் டிராக்டர் பயணத்தை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதை அடுத்து 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த 3 நாள்களாக டிராக்டர் பேரணியில் பிரசாரம் செய்து வருகின்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஹரியாணா எல்லையில் ராகுல் காந்தி சென்ற டிராக்டர் பேரணியை 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சுட்டுரையில் ராகுல் காந்தி கூறியதாவது, ஹரியாணா எல்லையில் எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இங்கு காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் இந்த இடத்தைவிட்டு 5 ஆயிரம் மணிநேரம் ஆனாலும் நகரப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.