தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் 413 நிலநடுக்கங்கள்

PTI

தேசிய நில அதிர்வு மையம் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்களை பதிவு செய்ததாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புவியியல் அமைச்சகம் மாநிலங்கவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 

இந்தியாவில் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதில், 135 நிலநடுக்கங்கள் 3.0 ரிக்டர் அளவிற்கு குறைவாகவும், 153 நிலநடுக்கங்கள் 3.0 முதல் 3.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.

மேலும், 114 நிலநடுக்கங்கள் 4.0 முதல் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது, இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

11 நிலநடுக்கங்கள் மட்டுமே 5.0 முதல் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதில் பழைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT