தற்போதைய செய்திகள்

தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு: தில்லி காவல் ஆணையர்

ANI

தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தில்லியில் நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தில்லியில், இரவு நேரம் மற்றும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வார இறுதி நாள்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா பேசியது,

வார இறுதி ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் கடுமையாக அமல்படுத்துயுள்ளனர். தேவையில்லாமல் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது.

வார இறுதி ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் இருந்தால் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT