தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள்:கிருஷ்ணகிரி நீதிமன்றம்

DIN


கிருஷ்ணகிரி: கள்ளக்காதலன் கொலை வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

பெங்களூரை சேர்ந்தவர் கோபிகா என்ற மமதா தேவி (30). இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே கோபிகாவுக்கும் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் இந்த உறவு நீடித்தது. இந்த நிலையில் கோபிகா விற்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த செவன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கிருஷ்ணாவுக்கும்  கோபிகா விற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கோபிகா, செத்தான், செவத்தானின் உறவினர் சக்திவேல் (20), ஆகியோர் ஒன்று சேர்ந்து 9 12 2017 அன்று, பெங்களூரில் இருந்த கிருஷ்ணாவை வரவழைத்து, கிருஷ்ணகிரி அருகே கொலை செய்கின்றனர்.

இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிகா, செல்வதான், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆர் விஜயகுமாரி, தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வாசித்தார்.

அதில் கோபிகா, செத்தான், சக்திவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தடையங்களை மறைத்ததற்காக செத்தான், சக்திவேல் ஆகியோருக்கு மேலும்  7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT