முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்து வருகிறார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்து வருகிறார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது,

தமிழகத்தில் கரோனா நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால், பரிசோதனை மையத்தையும், பரிசோதனையின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காத ஒன்று. சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை. அவர் அமமுகவை சேர்ந்தவர்களுடன் தான் பேசி வருகிறார். சசிகலாவின் குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே கட்சியினரின் கருத்தாக உள்ளது எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →