முகப்பு
தற்போதைய செய்திகள்

மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா

மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கரோனா
பகிர்:

மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று அவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,

நான் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதை, வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன்.

காணொலி மூலம் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன். எங்களது குழு உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →