உசிலம்பட்டி நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
தற்போதைய செய்திகள்உசிலம்பட்டி நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தல் காலையில் நடைபெற்றது. இதில் 11வது வார்டு திமுக உறுப்பினர் சகுந்தலா வெற்றி பெற்றார்.
பிற்பகல் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ள நிலையில் மதியம் 2 மணியில் தொடங்கியது. அரை மணி நேரம் வேட்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 24 வார்டு உறுப்பினர்களின் இதில் 9 வார்டு உறுப்பினர்கள் மட்டும் வருகை தந்ததால் போதிய வருகைப் பதிவு இல்லாத காரணத்தினால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் துணைத் தலைவர் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் உரிய ஆணைகள் பிறப்பித்த உடன் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி முத்து தெரிவித்தார்