தற்போதைய செய்திகள்

உத்தரகண்ட்: கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாமோலி மாவட்டத்தில் உள்ள நிதி-மனா பள்ளத்தாக்குகளை இணைக்கும் சாலை சனிக்கிழமை பனியால் மூடப்பட்டது.

இதனால் உள்ளூர்வாசிகள் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலையில் பல தடைகள் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பள்ளத்தாக்கின் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், ராணுவ வாகனங்கள், ராணுவ வீரர்கள் எல்லையை கடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாலையில் விரைவான போக்குவரத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக, சாலையை சுத்தம் செய்யும் பணியை எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) மேற்கொண்டது.

இச்சூழலில் மாறிவரும் வானிலை மாற்றத்தால் பத்ரிநாத் நெடுஞ்சாலையைத் திறக்கும் பணியையும், மலாரி-நிதி எல்லைச் சாலையில் இருந்து பனி அகற்றும் பணியையும் பிஆர்ஓ மேற்கொண்டுள்ளது என பிஆர்ஓ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT