மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து 61 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றிருப்பதால் மீன்கள் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலத்தில், விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நாள்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனா்.
இந்த காலகட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும்.
இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது; சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.
மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் அதிகயளவில் மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் மீன் சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படும். மீன்களின் விலையும் கணிசமாக குறைந்து காணப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.