தற்போதைய செய்திகள்

முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மத்தியஅமைச்சர் கிரிராஜ் சிங்!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மத்தியஅமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து கூறியதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

”முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்துக்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால், இந்தியா பாகிஸ்தானைப் போல் மாறிவிடும்” என மத்தியஅமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ், ''முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமாகும். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது இந்துக்கள் மீதான தாக்குதலே. இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடாவில்லையெனில், வருங்காலத்தில் இந்தியா பாகிஸ்தானைப் போல் மாறிவிடும்'' எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். சசிதரூர், ”உண்மையில், சோகமான விஷயம் என்னவென்றால், பிரிவினையின் பிம்பத்தினை பாஜக எதிரொளிப்பதால் தான் இந்தியா, பாகிஸ்தானைப் போல் மாறிவருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைத்து சாராரும் உள்ளடங்கி இருப்பதையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானாக மாறக்கூடும் என மத்திய அமைச்சர் பேசுவது நியாயமன்று. அவரின் பேச்சு பாகிஸ்தானின் பிம்பத்தை எதிரொளிக்கிறது” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT