dot com
தற்போதைய செய்திகள்

ராகுல், சோனியா வாக்களிப்பு!

தில்லியில், ராகுலும் சோனியாவும் வாக்களித்துவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

Sakthivel

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தில்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

தில்லியில் இன்று ஆறாம்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தில்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, வாக்குச்சாவடியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த போட்டிக் களம், பாஜகவுக்கு சவாலாக உள்ளது. மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இந்த கட்சி களத்தில் உள்ளது.

எதிரணியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகின்றன.

இந்த 6ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தில்லியில் 7 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஒரிசாவில் 6 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜௌரியில் 3ஆம் கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு உட்பட 58 தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி! சம்பவ இடத்தின் காட்சிகள்!

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

அஜீத் பவாரின் நிறைவேறாத முதல்வர் கனவு! மகுடம் சூடாத மக்களின் மன்னர்!

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

SCROLL FOR NEXT