பாக்., முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேன், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்திருந்த புகைப்படத்தினைப் பகிர்ந்து, ”வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் தோற்கடிக்கட்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
பாக்., முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரவிந்த் கேஜரிவால் ”நானும் எனது நாட்டுமக்களும் எங்களின் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். பாகிஸ்தானில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், ”இந்தியாவில் தேர்தல் என்பது எங்களது உள்விவகாரம். பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்றும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.