பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் சோதனை!

இந்திய எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் சோதனை ஓட்டம் நடைபெற்றதைப் பற்றி...

DIN

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் மாநில அரசின் சார்பில் அதிநவீன டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தார்ன் தரன் மாவட்டத்திலுள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக டிரோன் செயல்பாடுகள் மற்றும் எல்லைகள் தாண்டி மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் அதிகமுள்ள பகுதியான சராய் அமானத் கான் பகுதியில் அதிநவீன டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து இன்று (மார்ச் 19) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில அரசின் அமைச்சர்கள் அமான் அரோரா மற்றும் லலிஜித் சிங் புல்லார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் டிரோன்களை அடையாளம் கண்டு, அதனை செயலிழக்கச் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் பற்றி சர்ச்சை பதிவு: ம.பி.யில் பதற்றம்... ஒருவர் கைது!

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா பாகிஸ்தான் எல்லையைக் கடந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் தடுக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

மேலும், மிகவும் சவாலான நிலைமைகளில் இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றது எனபதை மதிப்பிடுவதற்காக அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கி இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில அமைச்சர் அமான் அரோரா கூறுகையில், சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை எல்லைப் பாதுகாப்புப் படையினருடையது என்றாலும் அவர்களது முயற்சிகளை நிறைவு செய்ய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலாத் தளம் இன்று மூடல்!

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

தூய்மைப் பணியாளர் போராட்டம்! பணிநிரந்தரம் கூடாது என்பதுதான் சரி!

SCROLL FOR NEXT