முக்கியச் செய்திகள்

தித்லி புயல் காரணமாக ஒதிசாவில் கடுமையான நிலச்சரிவு, ஒதிசா, ஆந்திரா இடையே புயல் கரையைக் கடந்தது! 

RKV

சென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தித்லி புயல்  ஆந்திரா மற்றும் ஒதிஷாவுக்கு இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கரையைக் கடந்தது. இதன் விளைவாக ஒதிசாவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒதிசா, கடலோர மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் நேற்றிரவு முதல் தங்களது வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

கூடுதலாக ஆந்திராவின் கடலோரப் பகுதி மற்றூம் ஒதிசா கடலோரப்பகுதியில் அமையும் மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. 
ஏனெனில் இவ்விரு மாநிலங்களிலும் தித்லி புயலின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தூருடன் சாலைகளில் சாய்ந்து விழுந்து கிடக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி சாலைப் போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு மணிக்கு 150 கிமீ வேகத்தில் புயல்காற்று வீசி வருகிறது. எனவே பெருவாரியான கடலோரப் பகுதி மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

தித்லி புயலால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ 1000 தேடிய பேரிடர் மீட்புக் குழுவினரை மத்திய அரசு அனுப்பியுள்ளதாகத் தகவல். அது தவிர வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு புகலிடம் அளிக்க 836 பாதுகாப்பு முகாம்களும் திறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
 

IMAGE COURTESY: NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT