முக்கியச் செய்திகள்

ஸ்கூப் நியூஸ்களைப் பெற நிருபர்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுவது சகஜம்: அமெரிக்கப் பத்திரிகையாளரின் சர்ச்சை கருத்து!

RKV


ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளரான ஜெஸ்ஸி வாட்டர்ஸ், சக பெண் நிருபர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட செய்தி ஒன்று தற்போது கடும் சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.  அவர் புதன் அன்று கலந்து கொண்ட ஃபாக்ஸ் நியூஸ் டாக் ஷோக்களில் ஒன்றான ‘தி ஃபைவ்’ நிகழ்ச்சியில் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதிலிருந்து, இது ஒன்றும் புதிதல்ல, ஹாலிவுட்டிலும், பத்திரிகையாளர்களின் நிஜ வாழ்க்கையிலும் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று தான் எனக் கூறியிருந்தார். 

‘அலி வாட்கின்ஸ் எனும் பெண், பல ஆண்டுகளாக பிரபல பத்திரிகைகள் பலவற்றில் பணிபுரிந்திருந்து பத்திரிகைத் துறையில் மிகுந்த அனுபவம் மிக்க பத்திரிகையாளராகத் திகழ்ந்து வந்தவர். ஆனால், அவரே, தனக்கான ஸ்கூப் செய்திகளைப் பெற செய்திகளை உடனுக்குடன் பெற்றுத்தரக்கூடிய சோர்ஸ்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதால் தான் அவரால் அத்தனை ஸ்கூப் செய்திகளை உருவாக்க முடிந்தது, இது இங்கே பரவலாக நடக்கக் கூடியது தான்’

- என்று ஜெஸ்ஸி வாட்டர்ஸ் தெரிவித்திருந்தார். 

பெண் நிருபர்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட இத்தகைய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தன்னுடைய துறை சார்ந்த பெண்களை ஜெஸ்ஸி வாட்டர்ஸ் இப்படி இழிவு படுத்தியிருக்க வேண்டியதில்லை. அப்படி இழிவு படுத்தும் எண்ணத்துடன் இருப்பவர்களையும், இயங்குபவர்களை ஜெஸ்ஸி கண்டித்திருக்க வேண்டுமே தவிர இவ்விதமாக அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்திருக்கக் கூடாது. என்ன சி என் என் செய்தியாளரான கப் தனது ட்விட்டர் தளத்தில் ஜெஸ்ஸிக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

ஜெஸ்ஸி வாட்டர்ஸ் திடீரென ஏன் இப்படியொரு கருத்தை வெளியிட்டார்?

கிளிண்ட் ஈஸ்ட்வுட்ஸின் வெளிவரவிருக்கும் திரைப்படமான  ‘ரிச்சர்ட் ஜுவல்’ எனும் திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக கேத்தி ஸ்க்ருக்ஸ் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சில வாரங்களாகக் கடுமையான விவாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அத்திரைப்படத்தில் முன்னாள் அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிட்டியூஷன் நிருபரான கேத்தி, ஸ்கூப் நியூஸ்களைப் பெறுவதற்காக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

அத்தகவல் குறித்து ஜெஸ்ஸி வாட்டர்ஸ் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோவில் கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது தான் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் பத்திரிகையாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT