ராமா் கோயில் பூமி பூஜை: செய்தி நேரலை
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று கோயில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
செய்தி நேரலையாக இங்கே..
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்
அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். விரிவான செய்திக்கு..
அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது: உமா பாரதி
அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தொடங்கியது
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை தொடங்கியது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். விரிவான செய்திக்கு..
ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி
ராமர் கோயில் பூமி பூஜையை நேரலையாகக் காண...
வீட்டிலிருந்தே பூமி பூஜையைக் காண..
விழா நடைபெறும் இடத்தின் நுழைவாயில்
அயோத்தியில் பிரதமர் மோடி: தனி மனித இடைவெளியுடன் வரவேற்பு
அயோத்தியில் பிரதமர் மோடி: தனி மனித இடைவெளியுடன் வரவேற்பு
லக்னௌவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனி மனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வரவேற்றார். விரிவான செய்திக்கு..
ராமா் கோயில் பூமி பூஜை: சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும்
அயோத்தியில் நடைபெறும் ராமா் கோயில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் என்று நம்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா். விரிவான செய்திக்கு..
இன்று ராமா் கோயில் பூமி பூஜை: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று கோயில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். விரிவான செய்திகள்..
தில்லியில் மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். விரிவான செய்திக்கு..
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்களின் தொகுப்பு
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்களின் தொகுப்பினைக் காண..