முகப்பு
சிறப்புச் செய்திகள்

தமிழகப் பேரவைத் தேர்தல்: செய்திகள் உடனுக்குடன்

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  செய்திகள் உடனுக்குடன்.. 

Updated On : 22 ஜூலை, 2025 at 11:21 AM
தமிழகப் பேரவைத் தேர்தல்: செய்திகள் உடனுக்குடன்
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2021 at 7:17 AM

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 7:17 AM

அதிகளவில் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 6:23 AM

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவு; நாமக்கல் முதலிடம்

தமிழகத்தில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 5:52 AM

எடப்பாடி தொகுதியில் முதல்வர் வாக்களித்தார்

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். விரிவான செய்திக்கு...

Updated On : 6 ஏப்ரல், 2021 at 5:51 AM

3-வது முறை அதிமுக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரிவான செய்திகளுக்கு...

Updated On : 6 ஏப்ரல், 2021 at 5:20 AM

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்த போது..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 5:19 AM
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாளையங்கோட்டை குழந்தை இயேசு பள்ளியில் வாக்களிக்க வந்தபோது செல்பி எடுத்துக் கொண்ட பெண் வாக்காளர்கள். படம் வெங்கடேஷ்.
Updated On : 6 ஏப்ரல், 2021 at 4:44 AM

கிருஷ்ணகிரியில் வாக்களித்தார் கே.பி. முனுசாமி 

 கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வேப்பனஹள்ளி சட்டப்பேரவை அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி எம்.பி. தனது வாக்கைப் பதிவு செய்தார்.

Updated On : 6 ஏப்ரல், 2021 at 4:22 AM

தமிழிசை சௌந்தரராஜன் கணவருடன் வந்து வாக்களித்தார்

 தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார். விரிவான செய்திக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 4:22 AM

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குப்பதிவு

 தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. விரிவான செய்திக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 4:11 AM

பணப்பட்டுவாடாவை ஆணையம் கண்டுகொள்ளவில்லை: சீமான்

 பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படிக்க...

Updated On : 6 ஏப்ரல், 2021 at 3:59 AM

சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்

 சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். மேலும் படிக்க...

Updated On : 6 ஏப்ரல், 2021 at 3:37 AM

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 3:20 AM

வளசரவாக்கத்தில் சத்யபிரத சாஹு வாக்களித்தார்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். விரிவான செய்திகளுக்கு...

Updated On : 6 ஏப்ரல், 2021 at 3:12 AM

மே 2-ல் தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்: மு.க. ஸ்டாலின்

 நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:45 AM

ஸ்டாலின், கமல், ரஜினி வாக்களித்தனர்

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. விரிவான செய்திகளுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:21 AM

தமிழகப் பேரவைத் தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. விரிவான செய்திகளுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:21 AM

வாக்களிக்க 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று போதும்

 சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்காளா்கள் தங்களது வாக்கினைச் செலுத்தலாம். விரிவான செய்திகளுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:20 AM

முகக் கவசம் கட்டாயம்: கரோனா சூழலில் வாக்களிப்பது எப்படி?

 கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விரிவான செய்திகளுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:19 AM

வாக்குப் பதிவு நேரமும், நடைமுறைகளும்...

 அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தலா 12 கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் அளிக்கப்படும். விரிவாகப் படிக்க..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 2:18 AM

புகாா் கூற செயலியும்-தொலைபேசி வசதியும்

 தோ்தல் தொடா்பான புகாா்கள், விவரங்கள், கூடுதல் வசதிகளைப் பெறுவதற்கான தனித்த செயலிகள், தொலைபேசி எண்களை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. விரிவாகப் படிக்க..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 1:35 AM

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு..

Updated On : 6 ஏப்ரல், 2021 at 1:31 AM

கரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு உடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். விரிவான செய்திக்கு....

Updated On : 6 ஏப்ரல், 2021 at 1:29 AM

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு...

Updated On : 5 ஏப்ரல், 2021 at 11:52 PM

தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குப்பதிவு

பிற்பகல்மூன்று மணி நிலவரப்படி 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 11:51 PM

புதுச்சேரி: 3 மணி நிலவரப்படி 65.11% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 8:20 PM

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவு

மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

முழு கட்டுரையைப் படிக்க →