தற்போதைய செய்திகள்

அம்பானி குடும்ப வாரிசு ஆகாஷ் அம்பானியின் மணமகளாகக் கிசுகிசுக்கப்படும் ஸ்லோகா மேத்தா யார்?

மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து

RKV

அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். வரும் டிசம்பரில் அம்பானி மாளிகையில் திருமண மேளச்சத்தம் ஒலிக்கத் தொடங்கலாம். முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவியாக கிசுகிசுக்கப்படும்... (அட ஆமாங்க இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லையே! அப்போ கிசுகிசுக்கப்படும் என்று தான் சொல்லியாக வேண்டும்.) இளம்பெண் யார் தெரியுமா? அவரது பெயர் ஸ்லோகா மேத்தா. ஸ்லோகா மேத்தா வைர வியாபாரி ரஸ்ஸெல் மேத்தாவின் இளைய மகள். 

தெற்கு மும்பையில் வசித்து வரும் இந்த இரு  பிரம்மாண்டமான குடும்பங்களும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் இல்லை. முன்பே இரு குடும்பங்களுக்கும் நல்ல அறிமுகமுண்டு. இந்த திருமண வதந்தியில் அதிகமாகக் கிசுகிசுக்கப் படும் மற்றொரு வதந்தி என்னவென்றால் ஆகாஷ் அம்பானியின் வரனாகக் கருதப்படும் ஸ்லோகாவின் தாயார் மோனா மேத்தா தற்போது வங்கிக் கடன் மோசடியில் சிக்கி நாட்டை விட்டு ஓடிப்போனவராகக் கருதப்படும் நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் என்பதே! 

மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து முடித்தவர். அதாவது பள்ளிக்காலத்திலிருந்தே இருவருக்கும் நல்ல பரிச்சயமுண்டு.

பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின் பிரின்ஸ்டனில் மானுடவியல் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நிறைவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தனது நண்பர்களுடன் இணைந்து ‘கனெக்ட்ஃபார்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றையும் ஸ்தாபித்து ஸ்லோகா நடத்தி வருகிறார்.

இப்போது வரையிலும் இரு குடும்பங்களும் இந்தத் திருமண விஷயத்தை வதந்தி என்று மறுத்து வந்தாலும். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 24 அன்று மும்பையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் காற்றில் ஒரு சேதி உலவுகிறது. மும்பையின் இரு மெகா பணக்காரக் குடும்பத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஸ்விட்சர்லாந்தில் வைத்து நடத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT