தற்போதைய செய்திகள்

தென்னிந்தியாவை தனி நாடாக்கக் கோரும் தெலுங்கு தேச எம்.பி!

எந்தச் சலுகையாக இருந்தாலும், அவை முதலில் வட இந்தியாவுக்காகவே ஒதுக்கப்படுகின்றன. வட இந்தியர்களோடு ஒப்பிடுகையில் தென்னிந்தியர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறார்கள். இது சரியில்லை

RKV

கடந்த ஃபிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பியும் நடிகருமான முரளி மோகன். மாநிலங்களுக்கான சலுகைகள் வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டே செயல்படுமாயின் தெற்கில் இருக்கும் 5 மாநிலங்களும் தனியாகப் பிரிந்து தனிநாடு கோரிக்கையை முன் வைத்துப் போராட வேண்டிய நிலையை மத்திய அரசே ஊக்குவித்ததாக ஆகிவிடும். தென்னக மாநிலங்கள் சலுகை விஷயத்தில் மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என்று பேசி இருந்தார்.

எந்தச் சலுகையாக இருந்தாலும், அவை முதலில் வட இந்தியாவுக்காகவே ஒதுக்கப்படுகின்றன. வட இந்தியர்களோடு ஒப்பிடுகையில் தென்னிந்தியர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறார்கள். இது சரியில்லை. இதே நிலை தொடருமானால் நாங்க்ள 5 மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தனி நாடு கோரி போராடத் தொடங்கி விடுவோம் எனும் அவரது உரை பேசப்பட்ட அன்று பெரிய விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லையாயினும் சமீபத்தில் தெலுங்கு தேச எம்பிக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தின் பின் இன்று மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எம்.பி. முரளி மோகன் தென்னகத்தின் 5 மாநிலங்கள் எனக்குறிப்பிடுவது ஆந்திரம், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவாகத் தான் இருக்குமென்பது இங்குள்ளவர்களுக்கு தெரியாதா என்ன? இணையத்தில் இந்தப் பேச்சுக்கு கலவையாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT