தற்போதைய செய்திகள்

‘ஒமைக்ரான் வைரஸால் மேலும் பல நாடுகள் பாதிக்கப்படும்’: உலக சுகாதார நிறுவனம்

DIN

உலகின் 23 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பதிவான நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் அதேவேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் சூழல் குறித்து புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் உலகில் 23 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் உலகின் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT